நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா? ஆர்.எஸ். பாரதி பதில்!

திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி பேட்டி

News image

திமுக அமைப்புச் செயலர் ஆர். எஸ். பாரதி. - கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திமுக - அதிமுக கூட்டணி என்பது வதந்தி என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"இன்று அனைத்துக் கட்சிகளும் உடைந்து விட்டது. திமுகதான் நிலையான கட்சி. அதனால் எங்களுக்கு வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை.

திமுக - அதிமுக கூட்டணி என்பது யூகம், அது ஒரு வதந்தி.

60 ஆண்டு காலமாக ஒரே கட்சிகள் ஆட்சி செய்கின்றன என்று கூறிய விஜய், இப்போது அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை தன்னுடைய கட்சியில் சேர்க்க போகிறாரா? சி.வி. சண்முகம் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி தரப்போகிறாரா? என்பதை விஜய்யிடம் நீங்கள் கேட்க வேண்டும்.

சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் தொடர்ந்து பதவியில் இருந்தவர். சிலருக்கு பதவி வெறி இருக்கும். அவர்கள் அதிமுகவில் இருந்து பிரிந்து தவெக செல்வதற்கு இப்போது திமுகவை காரணம் காட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் கட்சி மாறுவது, மைனாரிட்டி ஆட்சி என இதுவரை இல்லாத விஷயங்கள் நடந்து வருகிறது. திமுகவைப் பொருத்தவரை எந்த முடிவு வந்தாலும் நாங்கள் நிலையாக இருப்போம்" என்று தெரிவித்தார்.

Summary

Did alliance talks take place between DMK and AIADMK, R.S. Bharathi responds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.