தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திமுக - அதிமுக எதிரிகள்; கூட்டணிக்கு வாய்ப்பில்லை! டி.கே.எஸ். இளங்கோவன்

திமுக - அதிமுக கூட்டணி குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம்...

News image

திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் - ANI

Updated On :8 மே 2026, 11:59 am IST

திமுகவுக்கும் அதிமுகவுக்கு பிரதான எதிரிகளாக இருக்கும் நிலையில் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது. தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்படுவதில்தான் விருப்பம் எனத் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விசிக, இடதுசாரிகள் தனித்தனியே அவர்கள் கட்சி செயற்குழுக் கூட்டங்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலினும் ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், அதிமுகவுக்கு திமுக ஆதரவளிக்குமா? என்ற ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்துள்ளார்.

“இது சாத்தியம் இல்லை என்று நான் நம்புகிறேன். ஏனெனில், தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் பிரதான எதிரிகளாக இருக்கின்றன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தவெகவுக்கு ஆதரவா? இல்லையா? என்பதை இன்று இரவுக்குள் விசிகவும், இடதுசாரிகளும் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

DMK and AIADMK are rivals; there is no possibility of an alliance! — T.K.S. Elangovan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.