விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

கட்சியில் இணைய அழுத்தம்தான் காரணமா? பாஜக மீது திமுக குற்றச்சாட்டு

மற்ற கட்சிகளின் உறுப்பினர்களை வற்புறுத்தி சேர்ப்பதாக பாஜக மீது டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

AAP Rajya Sabha MPs join BJP

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி.க்கள் - X | BJP

Published On :

மற்ற கட்சிகளின் உறுப்பினர்களை வற்புறுத்தி சேர்ப்பதாக பாஜக மீது திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி எம்.பி.க்கள் 7 பேர் பாஜகவில் இணைந்தது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது, "மற்ற கட்சிகளின் உறுப்பினர்களை தங்கள் கட்சிக்குள் அழைப்பதன் மூலம் அவர்கள் (பாஜக) கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்வார்கள்.

எந்த வற்புறுத்தலும் இல்லையென்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், பலருக்கும் ஏதோ ஒரு காரணத்துக்காக அவர்கள் அழுத்தம் கொடுப்பதை நாங்கள் அறிவோம்.

டிகேஎஸ் இளங்கோவன்

டிகேஎஸ் இளங்கோவன் - விடியோ க்ளிப்

மகாராஷ்டிரத்தில் என்ன நடந்தது? அவர்கள் எப்படி ஆட்சியமைத்தனர்? வற்புறுத்தல் மூலமாகவும், எம்.பி.க்களை அவர்களுக்குள் சேர்த்துக் கொண்டதாலும்தான்.

இந்து அல்லாத ஒரு சர்தார் எப்படி பாஜகவில் சேர்ந்தார்?" என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான ராகவ் சத்தா, சந்தீப் பாடக், அசோக் மித்தல், ஸ்வாதி மாலிவால், ஹா்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சைனி ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் 10 எம்.பி.க்களில் 3-இல் 2 பங்கு எம்பிக்கள் பாஜகவில் இணைந்துள்ளது, ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Summary

DMK Leader TKS Elangovan accuses the BJP of coercively recruiting members from other parties

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.