மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

திமுக - அதிமுக ஒன்றிணைந்தால் பேரழிவு... நடிகர் விஷால் கருத்து!

நடிகர் விஷால் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேசியிருப்பதாவது...

actor Vishal.

நடிகர் விஷால். - படம்: எக்ஸ் / விஷால்.

Published On :

நடிகர் விஷால் தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எக்ஸ் பக்கத்தில், “திமுக - அதிமுக ஒன்றிணைந்தால் பேரழிவுமிக்க விளைவுகள் பொதுமக்களிடம் ஏற்படும்” எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகின. இந்தத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

ஆட்சி அமைக்க தேவையான 108 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும் நிலையில், யாருமே ஆட்சி அமைக்காத நிலை ஏற்படாமல் இருக்கிறது. இந்த நிலையில், திமுக - அதிமுக கூட்டணி அமைக்கும் என்ற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தவெக ஆட்சியமைக்காவிட்டால் எந்தக் கட்சி கூட்டணி அமைந்தாலும் பரவாயில்லை; ஆனால் நினைக்கவே முடியாத/ அதிர்ச்சியளிக்கும் விதமாக திமுக - அதிமுக கூட்டணி வைத்தால் பொதுமக்களிடமும் வாக்களர்களிடமும் அசம்பாவிதமும் பேரழிவுமிக்க விளைவுகளும் ஏற்படும். அது யாருக்குமே நல்லதல்ல.

இதேபோல 2017/18 கோவா, மணிப்பூர், மேகலாயா குறிப்பாக கர்நாடகத்திலும் நிகழ்ந்தது. முதலில் அரசாங்கம் அமைக்கப்பட்டு பின்னர் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். இதேபோல் தளபதி விஜய்க்கு ஏன் அரசமைக்க ஆளுநர் மறுக்கிறார்? மக்களின் வாக்குகளுக்கு என்ன மரியாதை? 233 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும்போது அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.

தவெக பெரும்பான்மையாக வென்றுள்ள நிலையில் ஆளுநர் ஆளமுடியாது. இந்த அடிப்படையான உரிமைகள் அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல மிகப் பெரிய சக்தியான தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். டியர் விஜய் நீங்கள்தான் அரசமைக்க வேண்டும். ஒரு வாக்களராக நான் இதனை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

Summary

shellshocking combination of DMK/AIADMK alliance to form the next government says actor vishal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.