மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையானது, மே மாதம் ரூ. 1,000 வழங்கப்படுமா? அல்லது ரூ. 2,500 வழங்கப்படுமா? என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவிலேயே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது.
மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை சட்டப்பேரவையில் கடந்த 2023, மார்ச் 27-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். முதல்கட்டமாக சுமார் 1,13,75,492 மகளிர் தெரிவு செய்யப்பட்டு, ரூ.1,000 உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது.
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இரண்டாம் கட்டமாக கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டு, 1.31 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
தேர்தலைக் காரணம்காட்டி முன்கூட்டியே 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 3,000 மற்றும் கோடைக் கால சிறப்புத் தொகையாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000-ஐ மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு வரவு வைத்தது.
இந்த நிலையில், மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையானது ரூ. 1,000 வழங்கப்படுமா? அல்லது ரூ. 2,500 வழங்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருந்தாலும், இந்தத் திட்டம் அரசு திட்டம் என்பதால் நிறுத்தி வைப்பதற்கான வாய்ப்பில்லை என்றும் இந்த வாரத்தின் இறுதியில் வரவு வைக்கப்படும் என்றே தெரிகிறது.
தவெக தலைவர் விஜய் வாக்குறுதியாக அளித்துள்ள ரூ. 2,500 ரொக்கத் தொகை குறித்து, இதுவரை முதல்வர் ஜோசப் விஜய் பேசாத நிலையில், இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது பலரின் கேள்வியாகவுள்ளது.
மே மாதம் மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதை ஓரிரு நாள்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 107 இடங்களில் வென்ற தவெக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைச்க ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அனுமதி அளித்த நிலையில் புதன்கிழமைக்குள் (மே 13) சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
A question has arisen among the public regarding the monthly Women's Entitlement Scheme specifically, whether the payout for the month of May will be Rs. 1,000 or Rs. 2,500.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வருமா? வராதா?

மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வருமா?

மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டங்கள் வேண்டாம்: மாயாவதி
மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 : திமுக தேர்தல் வாக்குறுதிகள்!
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு


