ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

ஜோதிடத்துக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது: தவெகவுக்கு விசிக ஆதரவு!

தவெக அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது.

Astrology Should Not Be Given Priority: VCK Extends Support to TVK

வன்னி அரசு - டிஐபிஆர்

Published On :

தவெக அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது.

சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்களித்து வன்னி அரசு பேசியதாவது:

என்னை தேர்வு செய்த திண்டிவனம் தொகுதி மக்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி.

மதச்சார்பற்ற கூட்டணி கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள தவெக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என நம்புகிறேன். அனைவருக்குமான அரசாக இருக்கும் என நம்புகிறேன். இதனால், தவெகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கிறது.

எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களை அவர்களின் இல்லத்திற்குச் சென்று முதல்வர் விஜய் சந்தித்தது பாராட்டுக்குரியது.

இந்த அரசு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு மூலம் எதிர்க்கட்சிகளின் துணையோடு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் முறியடித்தார். அதன் தொடர்ச்சியாக இந்த அரசும் மாநில உரிமைகளை பாதுகாப்பதில் சமரசம் இல்லாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தவெக அரசு 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான ஆதரவை விசிக வழங்குகிறது. புதிய ஆட்சி அமைந்தால் தமிழக மீனவர்களின் பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்துள்ளனர். மீனவர்கள் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆதரவு அளிக்கிறோம். நிபந்தனையற்ற ஆதரவு அளித்தாலும் சில நடவடிக்கைகளை தவெக அரசு எடுக்க வேண்டும்.

ஜோதிடம், பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராமல், அறிவியல் சிந்தனைக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

கல்வி, சுகாதாரம், தொழில்சாலையில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டை மேலும் பல துறைகளில் முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

அவை தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை அறிவார்ந்த முறையில் பயன்படுத்துவோம் என்பதை நிரூபிப்போம். நாட்டு மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வோம் என்ற அம்பேத்கரின் கூற்றுப்படி முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என வன்னி அரசு பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.