முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு! நாளை எப்போது நடக்கும்?

விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது குறித்து...

News image

சட்டப்பேரவையில் சி. ஜோசப் விஜய் - பிடிஐ

Updated On :12 மே 2026, 8:42 pm IST

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

நாளை பேரவை தொடங்கியவுடன் பெரும்பான்மை நிரூபிப்பதற்கான தொடக்க உரையில் முதல்வர் விஜய் பேசுவார். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான (108) இடங்களை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியது. எனினும் ஆட்சி அமைக்க 118 என்ற எண்ணிக்கை தேவை என்பதால், மற்ற கட்சிகளில் ஆதரவை நாடியது.

பின்னர் காங்கிரஸ் (5), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), மார்க்சிய கம்யூனிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

இதனைத் தொடர்ந்து முதல்வராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். உடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். 17 வது சட்டப்பேரவை நேற்று முன்தினம் (மே 10) கூடிய நிலையில், நேற்று எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்.

சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர், துணைத் தலைவர் ரவி சங்கர், கொறடாவாக சபரிநாதன் ஆகியோர் இன்று நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நடத்தி, சட்டப்பேரவையில் நாளை விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளனர். இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் அவையில் உள்ள உறுப்பினர்கள் கலந்துகொண்டு சரிபாதிக்கு மேல் வாக்களிக்க வேண்டும். குரல் வாக்கெடுப்பு மூலமாகவோ, அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலமாகவோ வாக்கெடுப்பு நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

floor test on Vijay's TVK Government in Tamil Nadu Assembly When Will It Take Place Tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.