தகவல் கொடுக்காமல் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “எங்களுடைய வேலைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறோம். போர்க்கால பெண்கள் பாதுகாப்பு, கஞ்சா விற்பனையை தடுப்பது, டாஸ்மாக் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள சொல்லியிருக்கிறோம்.
காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் நான் பிரசாரம் மேற்கொண்டபோது, அங்குள்ள மக்கள், போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக என்னிடம் கூறினார்கள்.
வில்லிவாக்கத்தில் 11 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 6 கடைகளை போர்க்கால அடிப்படையில் மூட வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம். நேற்று முதல்வர் விஜய் பிறப்பித்த உத்தரவின்படி ஒரு கடை மூடப்பட்டுவிட்டது.
டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, கள்ளச்சந்தையிலும் மதுபானங்கள் விற்கப்படுகின்றன. அதையும் உடனடியாக கண்டறிந்து, கைது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம். டாஸ்மாக் கடைகள் அரசு சொன்ன நேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். பெண்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுக்க சொல்லியிருக்கிறோம்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும், எந்தப் பெண்கள் வந்தாலும், கண்காணிப்புக் கேமராக்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறோம். அதுமட்டுமின்றி, காவல் நிலையத்தில் யார் புகார் அளித்தாலும் அதை விடியோ பதிவு செய்யச் சொல்லியிருக்கிறோம். அதற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சார்பில் ஐடி விங்கில் இருந்து ஒருவரை நியமிக்கவும் கூறியிருக்கிறோம்.
புகார் கொடுப்பவரும், புகாரை எடுத்துக்கொள்பவர்களும் விடியோ எடுத்து வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும்போது, இருதரப்பிற்கும் எதிர்காலத்தில் பிரச்னைகள் இருக்காது.
அதோடு, இங்கு அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவது பெரிய பிரச்னையாக இருக்கிறது. மின்தடை குறித்து முன்னதாக, பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும், அதற்கான காரணங்களைக் கொடுக்கவும் அறிவுறுத்தியிருக்கிறோம்.
நீர் மேலாண்மையை பொறுத்தவரை, இங்கு சுமார் 60 சதவிகித இடங்களில் குழாய்களே கிடையாது. ஒவ்வொரு வார்டிலும் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது குறித்து தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் எங்களிடம் சொன்னதை, தற்போது அதிகாரிகளிடம் அறிக்கையாக கொடுத்திருக்கிறோம்” என்றார்.
Summary
Minister Adhav Arjuna says Electricity supply must not be disconnected without prior notice to the public
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இனி தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படும் : ஆதவ் அர்ஜுனா
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
