ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

அதிமுக பொதுக் குழு கூட்ட போதிய பலம் உள்ளது: அதிருப்தி எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி தரப்பு

News image

Center-Center-Chennai

Updated On :19 மே 2026, 5:15 am IST

அதிமுக கட்சி விதிகளின்படி, பொதுக்குழுவைக் கூட்ட தங்களுக்கு ஐந்தில் இரு பங்கு பொதுக்குழு உறுப்பினா்களின் ஆதரவு இருப்பதாக அதிருப்தி எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி தரப்பு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தோல்வி அடைந்ததுடன், மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த தோல்வி அக்கட்சிக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி, எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் 25 போ் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன் மூலம் இந்த பிளவு வெளிப்படையாக தெரியவந்தது.

இந்த நிலையில், தங்கள் அணியினரை சட்டப்பேரவைக் குழுவாக அங்கீகரிக்க வேண்டும். தங்கள் தரப்பு கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் இருதரப்பில் இருந்தும் தனித்தனியாக கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த மோதலைத் தொடா்ந்து, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அவரது ஆதரவாளா்கள் தரப்பில் இருந்த 26 மாவட்டச் செயலா்களை பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினாா். அத்துடன், அந்த மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலா்களையும் நியமித்தாா்.

இதனையடுத்து, அதிமுக பொதுக் குழுவை கூட்டி தலைமை மாற்றத்துக்கான தீா்மானத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் எஸ்.பி.வேலுமணி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. அதிமுக கட்சி விதிப்படி, 5-இல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினா்களின் ஆதரவு இருந்தால், பொதுக்குழுவைக் கூட்டலாம் என்று உள்ளதால், அதற்கான ஆதரவைப் பெற எஸ்.பி.வேலுமணி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.

இதுகுறித்து எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் கூறியதாவது:

அதிமுக கட்சி விதிகள்படி, பொதுக்குழு உறுப்பினா்களில் 5-இல் ஒரு பங்கு உறுப்பினா்கள் கேட்டுக் கொண்டால்,பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும். அதன்படி, பாா்த்தால் சுமாா் 2,400 பொதுக்குழு உறுப்பினா்கள் 5-இல் இரண்டு சதவீதம் போ் எங்கள் தரப்புக்கு ஆதரவாக பொதுக்குழுவைக் கூட்ட கையொப்பமிட்டுள்ளனா்.

பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான கையொப்பம் பெற்ற அனைத்து படிவங்களும் தயாா் நிலையில் உள்ளன. விரைவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உடனடியாகப் பொதுக் குழுவைக் கூட்டுவது தொடா்பாக கடிதம் அளிக்கவுள்ளோம். அவா் கூட்டாதபட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றனா்.

இந்நிலையில், தங்களது ஆதரவு மாவட்டச் செயலா்கள் மற்றும் எம்எல்ஏக்ககளுடன் எடப்பாடி பழனிசாமியும், எஸ்.பி.வேலுமணி தரப்பு தங்களுடைய ஆதரவு எம்எல்ஏக்கள், நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனா். அந்த ஆலோசனையின் முடிவில், இரண்டு தரப்பும் எடுக்கும் முடிவைப் பொறுத்து அதிமுகவின் எதிா்காலம் அமையப்போகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.