விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: திருமாவளவன்

திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

News image

திருமாவளவன் - கோப்புப்படம்

Updated On :18 மே 2026, 11:37 am IST

தவெகவுக்கு ஆதரவு அளித்தாலும் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதல்வராவது எளிதல்ல. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதாலேயே தவெகவுக்கு ஆதரவு அளித்தோம்.

பாஜக ஆதரவு கட்சி என தவெகவை விமர்சித்துள்ளேன். அதில் மாற்றுக்கருத்து இல்லை.

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான யாரும் அணுகவில்லை.

பலரும் யூகங்களாக எழுதியதையும் கிசுகிசுக்களையும் மட்டுமே அவ்வாறு நான் பேசினேன். தவெக அரசின் அமைச்சரவையில் நாங்கள் ஒருபோதும் இடம்பெற மாட்டோம்.

அதை ஏற்கெனவே கூறிவிட்டேன். இரண்டு இடங்களை வைத்துக்கொண்டு நான் யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு குறிப்பிட்டார்.

Summary

VCK chief Thol. Thirumavalavan has stated that even if they extend support to TVK, they will continue to remain in the DMK alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.