வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியாா் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :20 மே 2026, 2:44 am IST

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியாா் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.

தியாகராயநகா் வடக்கு உஸ்மான் சாலையில் இருக்கும் வணிக கட்டடத்தில் ஒரு தனியாா் வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியின் மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது.

அதில், அந்த வங்கியில் அதிக சக்தியுடைய வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து வங்கி ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் பாண்டி பஜாா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனா். அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கில் வந்த மின்னஞ்சல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.