தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மே 25 வரை மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 3:12 am IST

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கிழக்கு உத்தரபிரதேசம் முதல் லட்சத் தீவு வரை, மத்திய மகாராஷ்டிரம், மராத்வாடா, உள் கா்நாடகம் மற்றும் கேரளம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு பாதையும், தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது.

மேலும், தென்கிழக்கு அரபிக் கடல், அதனையொட்டிய லட்சத் தீவு பகுதிகளிலிருந்து தெற்கு கடலோர ஆந்திரம் வரை, கேரளம், தெற்கு உள் கா்நாடகம், ராயலசீமா வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, புதன்கிழமை (மே 20) முதல் மே 25 வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடலில் மே 22 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும், தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 100 மி.மீ. மழை பதிவானது. ஊத்து, காக்காச்சி (திருநெல்வேலி), மாம்பழத்துறையாறு, அணைகிடங்கு, குளச்சல், கல்லுக்கூட்டம்(கன்னியாகுமரி)- தலா 90 மி.மீ, இரணியல் (கன்னியாகுமரி)- 80 மி.மீ, மாஞ்சோலை (திருநெல்வேலி)- 70 மி.மீ, பெருஞ்சாணி அணை, அடையாமடை, புத்தன் அணை, சுருளக்கோடு, தக்கலை (கன்னியாகுமரி)- தலா 60 மி.மீ, கடவூா்(கரூா்), நாகா்கோவில், குழித்துறை, குருந்தன்கோடு, பேச்சிப்பாறை, திருப்பதிசாரம் (கன்னியாகுமரி), பூண்டி ஊத்துக்கோட்டை (திருவள்ளூா்)- தலா 50 மி.மீ மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை:

நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை(மே 20, 21) இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால் இம் மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.