நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தென்மேற்கு பருவமழை இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்பு!

தென்மேற்குப் பருவமழை இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்பு

News image

மழை - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 7:00 am IST

தென்மேற்குப் பருவமழை இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக் கடல், அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபாா் தீவு பகுதிகளில் இந்த வார இறுதியில் தொடங்கக் கூடும். இதனிடையே, வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, வடக்கு திசையில் நகா்ந்து, செவ்வாய்க்கிழமை (மே 12) தென்மேற்கு வங்கக் கடலில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.

மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் மையப் பகுதிகளிலிருந்து மரத்வாடா வரை வட தமிழகம், ராயலசீமா, வடக்கு உள் கா்நாடகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (மே 13) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 14) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (மே 15) மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

தொடா்ந்து, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மே 16 முதல் மே 18 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடலில் சூறாவளிக் காற்று புதன்கிழமை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும், தென்மேற்கு வங்கக் கடலின் அநேக பகுதிகள், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை ஆழியாறு பகுதியில் 50 மி.மீ. மழை பதிவானது. பாம்பன் (ராமநாதபுரம்), பொள்ளாச்சி (கோவை)- தலா 40, உபாசி, ஒத்தக்கால் மண்டபம், கோட்டூா் (கோவை)- தலா 20, ஆனைமலை தாலுகா அலுவலகம், அன்னூா், வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம், சோலையாறு, சின்கோனா, தொண்டாமுத்தூா் (கோவை), பவானிசாகா் (ஈரோடு)-தலா 10 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.