சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

இன்றைய செய்திகள் - நேரலை!

தமிழ்நாடு, இந்தியா உலகளவில் நடக்கும் இன்றைய செய்திகள் நேரலையாக வழங்கப்படும்.

<P>21/08/2024 -   CHENNAI: Madras High Court   - Express Photo by P Jawahar. [Tamil Nadu, Madras High Court]</P>

சென்னை உயர் நீதிமன்றம் - Center-Center-Chennai

Published On :20 மே 2026, 11:10 am IST

நார்வேயில் பெண் நிருபர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்காமல் சென்ற சம்பவம் உலக அரங்கில் விவாதத்திற்குள்ளான நிலையில், அப்பெண் நிருபர் குறித்து பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அவை அனைத்திற்கும் சேர்த்து பதில் அளித்த நார்வே பெண் நிருபர் ஹெல்லே லிங், தான் வெளிநாட்டு உளவாளி எல்ல என்றும், பத்திரிகையாளர் எனவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பாக விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 221 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

3.83 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.05 லட்சம் மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 0.83 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியவற்றை உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கிட உரிய அலுவலர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் பத்தாம் ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் ”நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் அதில் உள்ள உதவி எண்களைப் பயன்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும் காங்கிரஸுக்கு அதில் இரண்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் இன்று (மே 19) தெரிவித்தார்.

நீட் தேர்வு மாணவர்களின் உரிமைக்கு எதிரானது. நீட் வேண்டாம் என்பதே எங்களின் (தவெக) கொள்கை முடிவு எனக் குறிப்பிட்டார்.

நீட் மறுதேர்வை கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் எந்தவித பிழையுமின்றி நடத்தி முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (மே 19) உத்தரவிட்டார்.

முதல்வர் விஜய்யுடன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் சந்தித்தபோது எடுக்கப்பட்ட விடியோ வெளியாகி சர்ச்சை.

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் விலகியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர அமைச்சரும் சிவசேனை தலைவருமான சஞ்சய் ஷிர்சத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, கேரளத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிப்பதற்கு ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கும் நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் தவறான காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில்பேசுபொருளாகியிருக்கிறார்கள்.

தெருநாய்கள் விவகாரத்தில் கடந்தாண்டு அளிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பில் திருத்தம் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

நரம்பியல் மருத்து சுப்பையா, கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை ஆர்.ஏ. புரத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் மிகப்பெரிய தவறை செய்துள்ளது என்று ...

தொழிலதிபா் கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மோசடி வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

அதிமுக மாவட்டச் செயலர்களுடன் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டுவதற்கான முன்னெடுப்புகளை எஸ்.பி.வேலுமணி தரப்பு மேற்கொண்டு வரும் நிலையில் இபிஎஸ் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதி வரும் 2027 ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 19) சவரனுக்கு ரூ. 960 உயர்ந்துள்ளது.

ஒரு சவரன் ரூ. ரூ.1,18,960-க்கும் கிராமுக்கு ரூ. 120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,870-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.