‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ நடவடிக்கையில் சென்னையில் நேற்று (மே 19) நள்ளிரவு 100 ரௌடிகள் கைது செய்யப்பட்டனர்.
முதல்வர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அதிரடிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆளும் தவெக அரசு சட்டம் - ஒழுங்கு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கோயில்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் மூடல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாடர்களான பரத் என்ற பரத்குமார் (25), சீனு என்ற சீனிவாசன் (24) இருவரும் கடந்த மே 16 ஆம் தேதி மணிமங்கலம் அருகே பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பல் இவர்கள் இருவரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவானது.
இது தொடர்பாக மணிமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிந்தும், தனிப்படை அமைத்தும் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்தச் சம்பவத்தில் சந்தோஷ் (23), கலைச்செல்வன் (20), ஐயப்பன் (26), குமரவேல் (20), (வேலன் (19) மற்றும் 2 சிறுவர்களை காவல் துறையினர் நேற்று காலை கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் யார்? என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
பாடகர்கள் கொலை எதிரொலியாக காவல் துறையினர் நடத்திய ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷனில் தியாகராய நகரில்18 ரௌடிகள், அடையாறில் 16 ரௌடிகள் புளியந்தோப்பில் 20 ரௌடிகள், அண்ணாநகரில் 9 ரௌடிகள், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 12 ரௌடிகள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்கவும், பல்வேறு குற்றச்சம்பவங்களில் தேடப்பட்டு வந்த ரௌடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
100 rowdies were arrested in Chennai at midnight during a ‘Special Drive Operation.’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








