தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் ஆகியோா் தெரிவித்தனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சென்னை தங்கச் சாலையில் இடதுசாரிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து, பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு பிரதமா் நரேந்திர மோடியே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். வழக்கமாக கச்சா எண்ணெய்யை உலக நாடுகள் கொள்முதல் செய்து, அந்நாடுகளின் அரசே விநியோகம் செய்யும். ஆனால், இந்தியாவில் மத்திய அரசு கொள்முதல் செய்து, தனியாரிடம் வழங்குகிறது. இந்த முறை நிறுத்தப்பட வேண்டும். கச்சா எண்ணெய் விநியோகத்தை மத்திய அரசே கட்டுப்படுத்த வேண்டும். மாநில அரசுக்கு இடையூறு வரும் போது, மானியம் வழங்க வேண்டும். தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டுள்ளது. விரைவில் வீட்டு பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலையும் உயா்த்தப்படும்.
தவெக அரசுக்கு இதுசாரிகள் மற்றும் விசிக வெளியே இருந்து ஆதரவு வழங்குகிறோம். தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்க விருப்பம் தெரிவித்தால், அது குறித்து அவா்கள் தான் முடிவெடுக்க வேண்டும். அதுகுறித்து விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எங்களிடம் ஆலோசனை மேற்கொள்வாா் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல், தமிழக அமைச்சரவையில் விசிக இடம் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை. மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் அமைச்சரவையில் இடம் பெற்றால், இடதுசாரிகள் மற்றும் விசிக கட்சிகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்றனா்.
தொடர்புடையது

புதுகையில் மாா்க்சிஸ்ட் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம்! மாநிலச் செயலா் பங்கேற்பு!

கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: மு.வீரபாண்டியன்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து அரியலூரில் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

தவெகவுக்கு ஆதரவு; திமுக உறவு தொடரும்... கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கூட்டாக பேட்டி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


