அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

59 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்! அதிகாரபூர்வ அறிவிப்பு!!

தமிழ்நாடு அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளதைப் பற்றி...

News image

தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யுடன் காங்கிரஸ் கட்சியினர்.

Updated On :21 மே 2026, 9:38 am IST

தமிழ்நாடு அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் இடம்பெற்றதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தவெக கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக ஆளுநர் மாளிகை இன்று (மே 21) காலை வெளியிட்டது.

இதில், சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார், மேலூர் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சா்களாக இடம்பெற்றுள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பொது தொகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகும் பெருமையையும் விஸ்வநாதன் பெற்றிருக்கிறார்.

Summary

An official announcement has been issued regarding the inclusion of two Congress MLAs in the Tamil Nadu Cabinet after 59 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.