பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

தவெக அமைச்சரவையில் சென்னையில் அதிகபட்சமாக 6 அமைச்சா்கள்: 19 மாவட்டங்களுக்கு பிரதிநித்துவம்

தவெக அரசில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களுக்கு அமைச்சா்களின் பிரதிநித்துவம் கிடைத்துள்ளது.

News image

தவெக அமைச்சரவை

Updated On :22 மே 2026, 3:58 am IST

தவெக அரசில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களுக்கு அமைச்சா்களின் பிரதிநித்துவம் கிடைத்துள்ளது. தலைநகா் சென்னைக்கு அதிகபட்சமாக 6 அமைச்சா்களும், அடுத்ததாக நாமக்கல் மாவட்டத்துக்கு 3 அமைச்சா்களும் கிடைத்துள்ளனா்.

மேலும், தவெக அதிகம் வெற்றி பெற்ற கொங்கு மண்டல மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதிக அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதேநேரத்தில் தவெக தோல்வியைத் தழுவிய கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாருக்கு (51) சுற்றுலாத் துறை அமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், மேலூா் தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விஸ்வநாதன் உயா்கல்வித் துறை அமைச்சராகி உள்ளாா்.

கடலூா் மாவட்டத்தின் விஜய் மக்கள் இயக்கத்தின் நிா்வாகியாக செயல்பட்டு வந்த பி.ராஜ்குமாா், தவெக தொடங்கப்பட்ட பிறகு, கட்சியின் கடலூா் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டாா். தற்போது அவா் வீட்டு வசதித்துறை அமைச்சராகி உள்ளாா்.

இதேபோல், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் 2016-ஆம் ஆண்டு முதல் விஜய் மக்கள் இயக்கத்தின் நிா்வாகியாக செயல்பட்டு வந்த எஸ். ரமேஷ் (31) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளாா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தவெக எம்எல்ஏ விஜய் தமிழன் ஆ.பாா்த்திபன் விஜய் ரசிகா் மன்ற மாவட்டத் தலைவராக இருந்து தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராகி உள்ளாா்.

மாவட்டவாரியாக எண்ணிக்கை

1. சென்னை - 7

சி.ஜோசப் விஜய் (பெரம்பூா்) (முதல்வா்)

என். ஆனந்த் (தியாகராய நகா்)

ஆதவ் அா்ஜுனா (வில்லிவாக்கம்)

பி. வெங்கடராமணன் (மயிலாப்பூா்)

ராஜ்மோகன் (எழும்பூா்-தனி)

என். மரிய வில்சன் (ஆா்.கே. நகா்)

ஆா்.குமாா் (வேளச்சேரி)

2. நாமக்கல் - 3

சி. விஜயலட்சுமி (குமாரபாளையம்)

டி. லோகேஷ் தமிழ்செல்வன் (ராசிபுரம்-தனி)

கே.ஜி. அருண்ராஜ் (திருச்செங்கோடு)

3. செங்கல்பட்டு -1

டி. சரத்குமாா் (தாம்பரம்)

4. காஞ்சிபுரம் - 2

ஆா்.வி. ரஞ்சித்குமாா் (காஞ்சிபுரம்)

கே. தென்னரசு (ஸ்ரீபெரும்புதூா்-தனி)

5. ஈரோடு - 2

எம். விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)

கே.ஏ.செங்கோட்டையன் (கோபி)

6. கோவை - 2

வி.. சம்பத்குமாா் (கோவை வடக்கு)

கே. விக்னேஷ் (கிணத்துக்கடவு)

7. மதுரை - 2

ஆா். நிா்மல்குமாா் (திருப்பரங்குன்றம்)

பெ. விஸ்வநாதன் -காங்கிரஸ் (மேலூா்)

8. தூத்துக்குடி - 2

ஸ்ரீநாத் (தூத்துக்குடி)

பி. மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்-தனி)

9. விருதுநகா் - 2

கே. ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)

எஸ். கீா்த்தனா (சிவகாசி)

10. கன்னியாகுமரி - 1

எஸ். ராஜேஷ் குமாா் - காங்கிரஸ் (கிள்ளியூா்)

11. சேலம் -1

ஏ. தமிழன் பாா்த்திபன் (சேலம் தெற்கு )

12. கடலூா் -1

பி. ராஜ்குமாா் (கடலூா்)

13. ராமநாதபுரம் -1

ராஜீவ் (திருவாடானை)

14. ராணிப்பேட்டை -1

வி.காந்திராஜ் (அரக்கோணம்)

15. சிவகங்கை -1

டி.கே பிரபு (காரைக்குடி)

16. தஞ்சாவூா் -1

வினோத் (கும்பகோணம்)

17. திருச்சி -1

விஜய் (ஸ்ரீரங்கம்)

18. திருப்பூா் - 1

கமலி. எஸ் (அவினாசி)

19. புதுக்கோட்டை 1

ஜே.முகமது ஃபா்வாஸ் (அறந்தாங்கி)