அமைச்சராகிறார் ஐயூஎம்எல் ஷாஜகான்! - காதர் மொய்தீன் அறிவிப்புபுதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!
/

தமிழ்நாட்டின் இளம் அமைச்சரானார் கமலி!

தமிழ்நாட்டின் இளம் அமைச்சராக கமலி பொறுப்பேற்றிருப்பது பற்றி...

News image

அமைச்சர் கமலி - TNDIPR

Updated On :21 மே 2026, 2:07 pm IST

தமிழ்நாட்டின் இளம் அமைச்சர் என்ற சாதனையை கமலி படைத்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்ற நிலையில், தவெகவின் அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். கமலி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இவருக்கு கால்நடைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 28 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்.எல்.ஏ.க்களாக பெரியகுளம் எம்.எல்.ஏ. சபரி ஐயங்கரன் மற்றும் அவிநாசி எம்.எல்.ஏ. கமலி ஆகியோர் சாதனை படைத்திருந்தனர்.

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான எல். முருகனை 15,373 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் கமலி.

முன்னதாக, மே 10 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற 29 வயதான கீர்த்தனா அமைச்சராகப் பதவியேற்றார்.

இவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் ஆகியோரை தோற்கடித்திருந்தார்.

மேலும், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற 31 வயதான ரமேஷும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த அறநிலையத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அறந்தாங்கி முகமது ஃபர்வாஸ், தாம்பரம் சரத்குமார், கிணத்துக்கிடவு விக்னேஷ் உள்ளிட்ட இளம் எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Summary

Kamali becomes Tamil Nadu's youngest Minister!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.