மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூவா் வெட்டிக் கொலைஇன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!

அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றப்பட்டது பற்றி...

K.A. Sengottaiyan

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்

Published On :

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு அமைச்சரை விரிவாக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. காங்கிரஸின் 2 எம்.எல்.ஏ.க்கள், தவெகவின் 21 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் தொடர்பான விவரங்களை ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது.

இதில், அமைச்சர் மரிய வில்சனுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமைச்சராக பதவியேற்ற செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர், வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாக அமைப்பு, துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை, சட்டப்பேரவை விவகாரங்கள் உள்ளிட்டவை கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் சி. ஜோசப் விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் ஆகியோரின் துறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

மே 10 ஆம் தேதி பதவியேற்ற மற்ற 6 அமைச்சர்களின் துறைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

Summary

Minister KA Sengottaiyan's Portfolio Change!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.