தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் ஆர்லேகர், இன்று (மே 21) காலை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
மே 10 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக ஜோசப் சி. விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தவெக கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக ஆளுநர் மாளிகை இன்று (மே 21) காலை வெளியிட்டது.
சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார், மேலூர் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோர் உள்பட 23 பேர் கொண்ட பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதல் நபராக தூத்துக்குடி எம்.எல்.ஏவும், முதல்வர் விஜய்யின் நண்பருமான ஸ்ரீநாத் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து கமலி, விஜயலட்சுமி, வினோத், ராஜீவ், ரஞ்சித்குமார், விஜய் பாலாஜி, மதன்ராஜா, காந்தி ராஜ், பார்த்திபன், லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிடோருக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதியதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் முதல்வர் விஜய்யிடம் பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துப் பெற்றனர்.
Summary
Governor Rajendra Vishwanath Arlekar administered the oath of office to the new ministers during the expansion of the Tamil Nadu Cabinet this morning (May 21).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!

தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! யார் எவருக்கு வாய்ப்பு?

தமிழக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் அமைச்சர்கள்! நாளை மறுநாள் பதவியேற்பு?
தமிழ்நாட்டின் முதல்வராக நாளை காலை பதவியேற்கிறார் விஜய்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



