பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. ஷாஜகான் நாளை(மே 21) அமைச்சராகப் பதவியேற்கிறார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்துள்ளது.
தவெக அரசு பெருந்தன்மையுடன் அமைச்சரவையில் சேர அழைப்பு விடுத்தது, அதனை ஏற்றுக் கொண்டு பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராவார் என்றும், எதிர்காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. ஷாஜகானை சேர்க்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலர் முகம்மது அபூபக்கர், நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் பரிந்துரை கடிதத்தை முதல்வர் விஜய்யிடம் அளித்தனர்.
இந்த நிலையில், பாபநாசம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.எல்.ஏ. ஷாஜகான் நாளை(மே 21) அமைச்சராகப் பதவியேற்கிறார்.
Summary
Shahjahan, the Indian Union Muslim League MLA from the Papanasam constituency, will take oath as a Minister tomorrow (May 21).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக அமைச்சரவையில் ஐயுஎம்எல்! அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொகிதீன்!

முதல்வர் ஜோசப் விஜய் நல்லாட்சியைத் தரவேண்டும்: கே.எம். காதர் மொகிதீன் வாழ்த்து
ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

பேராசிரியா் காதா் மொய்தீன் வாக்கு சேகரிப்பு!
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |




