தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை!

அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இடம்பெறாதது பற்றி...

News image

திருமாவளவன், காதர் மொய்தீன் - கோப்புப்படம்

Updated On :21 மே 2026, 9:57 am IST

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம்பெறவில்லை.

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெறும் நிலையில், 23 பேர் கொண்ட அமைச்சர்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

இதில், தவெகவைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அமைச்சரவையில் இணைய விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய முஸ்லிம் கட்சிகளுக்கு தவெக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், அமைச்சரவையில் இணைவது குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. அக்கட்சிகள் ஆலோசித்து அறிவித்த பிறகு, இரு அமைச்சர்கள் தனியாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இடதுசாரிகள் அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

VCK and IUML Excluded from Cabinet List!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.