அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறை ஒதுக்கீடு!அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறைகள் ஒதுக்கீடு! ஜூன் 18 - தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத் தேர்தல்!சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு! பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு இன்றும் கடைசி இடம்!

தமிழ்த் தாய் வாழ்த்து இன்றும் மூன்றாவதாக இசைக்கப்பட்டது பற்றி...

News image

அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் - TNDIPR

Updated On :22 மே 2026, 9:52 am IST

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமையும் தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த மே 10 ஆம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் பதவியேற்ற போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக இசைக்கப்பட்டது சர்ச்சையானது.

வழக்கமாக, தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது.

ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியாக இசைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டணிக் கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் முதலில் இசைக்கப்படும், இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவற்றை தொடர்ந்து மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தும் அவர் மறுத்துவிட்டதாக முதல்வர் விஜய் தெரிவித்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பெ. சண்முகம் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியிலும் தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாகவே இசைக்கப்பட்டுள்ளது.

Summary

Tamil Thai Vazhthu still holds the last place

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.