மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ராஜிநாமா!

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ராஜிநாமா செய்துள்ளதைப் பற்றி...

News image

மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா.

Updated On :25 மே 2026, 2:50 pm IST

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர், தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகவும், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இரண்டாக உடைந்தது.

காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெகவினர் தவிர்த்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் தவெகவை எதிர்த்தும், சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால், சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை தங்களது பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கொறடா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை, வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் இன்று (மே 25) சந்தித்துப் பேசியிருந்தனர்.

இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்புக்கு ஆதரவாக இருந்த 3 எம்எல்ஏக்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து மூன்று பேரும் தங்கள் கடிதங்களை வழங்கினர்.

எம்.எல்.ஏ.க்கள் மூவரும் முறைப்படி ராஜிநாமா கடிதம் அளித்துள்ள நிலையில், இன்று மாலைக்குள் ஆய்வு செய்து ராஜிநாமா ஏற்பு குறித்து அறிவிக்கப்படும் என்று அவைத்தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ராஜிநாமா செய்த எம்.எல்.ஏக்கள் மூவரும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்த நிலையில், இவர்கள் மூவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரையும், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரையும், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரையும் தோற்கடித்திருந்தனர்.

Summary

Three AIADMK MLAs belonging to S.P. Velumani's faction resigned from their posts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.