வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம்: 179 மாணவர்களுக்கு ரூ.15,000 குறள் பரிசுத்தொகை

தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தில் 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 179 மாணாக்கர்களுக்கு குறள் பரிசுத்தொகை குறித்து...

Tamilnadu Naal

தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தில் திருக்குறளை முற்றோதல் செய்த 179 மாணாக்கர்களுக்கு குறள் பரிசுத்தொகை வழங்கப்பட்டது - டிஎன்எஸ்

Updated On :

தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தில் 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 179 மாணாக்கர்களுக்கு குறள் பரிசுத்தொகை ரூ.15,000-ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ச. ஜோசப் விஜய் அறிவித்தார்.

அந்த வகையில், ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பெற்றது. தற்போது தமிழ்நாட்டின் எல்லைகளை நிர்ணயம் செய்ய அர்ப்பணிப்பு உணர்வோடு போராடிய சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், தளபதி விநாயகம், மங்கலங்கிழார். மார்ஷல் நேசமணி. திருவாலங்காடு திருமலைப்பிள்ளை, திருத்தணி ரஷீத், பி.எஸ். மணி, சாம் நத்தாணியேல், தோழர் ஜீவா உள்ளிட்ட பலரது போராட்ட வரலாற்றை நினைவுகூரவும், போற்றவும் நவம்பர் 1 ஆம் நாள் “தமிழ்நாடு நாள்” விழாவாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று (நவ.1) ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நா. ஆனந்த் தலைமையில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, பால்வளத் துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்பெற்றது.

Story image

ரூ.10 லட்சம் நூலுரிமைத் தொகை

இந்த விழாவில் வாழும் தமிழறிஞர் கவிஞர் கே. ஜீவபாரதி மற்றும் நினைவில் வாழும் தமிழறிஞர்கள் பேராசிரியர் ராஜ் கௌதமன், சாரணபாஸ்கரன் (எ) டி.எம்.எம். அகமது, சா. கந்தசாமி, டி.எம். பீர் முகமது ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் நூலுரிமைத் தொகை வழங்கப்பெற்றது.

Story image

எல்லைக் காவலர்களுக்கு உதவித்தொகை உயர்வு

தமிழ்நாட்டின் எல்லைக்காக பாடுபட்ட எல்லைக் காவலர்களுக்கு உதவித்தொகை ரூ.7500 -லிருந்து ரூ.10000-ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை 5 பேருக்கு வழங்கப்பட்டது. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதாளர்கள் 76 பேருக்கு ரூ.25,000-ம் தகுதியுரையும், பொன்னாடையும் வழங்கப்பெற்றது. 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 179 மாணாக்கர்களுக்கு குறள் பரிசுத்தொகை ரூ.15,000-ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றது.

Story image

இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா. விஜய் சரவணன், வெ. நாராயணன், அ. குழுந்தை ராணி நாச்சியார், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் முனைவர் புஷ்பவனம் குப்புசாமி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வி.சிவா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் அ.லயோலா மணி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tamil Nadu Day Celebrations: Rs. 15,000 'Thirukkural' Prize Money Awarded to 179 Students

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.