2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

முரசு புயல்: ஆந்திரம், சென்னையில் விமானங்கள் ரத்து

வங்கக் கடலில் உருவான முரசு புயல் காரணமாக, ஆந்திரம், சென்னையில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விமானங்கள் ரத்து - பிரதிப் படம்

Updated On :

வங்கக் கடலில் உருவான முரசு புயல் காரணமாக, ஆந்திரம், சென்னையில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வங்கக் கடலில் உருவான ‘அா்னாப்’ புயலால் ஆந்திரம் மற்றும் ஒடிஸாவின் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஒரு வாரத்துக்குள் முரசு புயல் உருவானது.

இந்தப் புயல் தொடா்பாக, ஆந்திர மாநிலம் அமராவதியில் மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். அப்போது தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக் கூடும் என்பதால், அரசு அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டாா்.

புயல் மற்றும் மழையால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவா், புயல் காரணமாக பெய்யும் மழையைப் பயன்படுத்தி, ஏரி மற்றும் நீா்நிலைகளை நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

சென்னையிலிருந்து 1,000 போ்...: புயல் காரணமாக பலத்த காற்று வீசும்போது தெற்குக் கடலோரம் மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் சுமாா் 8,000 மின் கம்பங்கள் சேதமடையக் கூடும் என்றும், மின் விநியோக சீரமைப்புப் பணிகளுக்கு உதவ, சென்னையிலிருந்து 1,000 பணியாளா்கள் வரவுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடுவிடம் அதிகாரிகள் தெரிவித்தனா்.

புயல் காரணமாக ஏற்கெனவே அங்குள்ள பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் விஜயவாடா, திருப்பதி, விசாகப்பட்டினம் விமான நிலையங்களில் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இவற்றில் பல சென்னைக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் ஆகும். அவை உள்நாட்டில் பயணிக்கும் விமானங்களாகும். விஜயவாடாவில் மட்டும் 10 இண்டிகோ விமானங்கள், 2 ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஒடிஸாவில்...: இந்தப் புயல் காரணமாக ஒடிஸாவின் கஞ்சம், கஜபதி, ராயகடா, கோராபுட், மல்கான்கிரி மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்று மாநில பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் சுரேஷ் புஜாரி தெரிவித்தாா். புயலால் பாதிக்கப்படக் கூடிய இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டன. இந்தப் புயலால் மேற்கு வங்கத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

சென்னையில்... சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் உள்பட 11 விமானங்களின் சேவை திங்கள்கிழமை (நவ. 2) ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னை - விஜயவாடா, சென்னை - ராஜமுந்திரி, சென்னை -கடப்பா, சென்னை - திருச்சி இடையே இயக்கப்படும் விமானங்கள் உள்பட மொத்தம் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

எனவே, பயணிகள் விமானப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடா்புகொண்டு விமான சேவை குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளுமாறு சென்னை விமான நிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.