தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு 160 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிடை நீக்கம்!நகராட்சி துறை பணி நியமன முறைகேடு! கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

பால் விலை உயருமா? ஆவின் விளக்கம்!

பால் விலை உயர்வு குறித்து ஆவின் விளக்கமளித்ததாவது...

ஆவின் பால் பாக்கெட்டுகள் - கோப்புப்படம்

Updated On :

பால் விலையை உயர்த்தப்போவதாக வெளிவந்த செய்திக்கு ஆவின் நிறுவனம் திங்கள்கிழமை (நவ. 2) மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை ஆவின் நிறுவனம் கேட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து ஆவின் நிறுவனம் அளித்த விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக நாளிதழில் வெளியான செய்தி தொடர்பாக, ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுவது:

ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தரமான பால் மற்றும் பால் பொருள்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் நலன், பால் கொள்முதல் விலை மற்றும் நுகர்வோரின் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆவின் செயல்பட்டு வருகிறது.

பால் விலை உயர்வு தொடர்பாக நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தவறான செய்தி. எனவே பொதுமக்கள் இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

Summary

Aavin has denied reports that it intends to increase milk prices, the company stated on Monday (Nov. 2).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.