பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

ஆவினில் புதிய பால், தயிர், ஐஸ்க்ரீம் அறிமுகம்!

ஆவினில் 500 மி.லி. நிறைகொழுப்பு பால், 50 கிராம் கப் தயிர், ஐஸ்கிரீம் ஆகிய புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பற்றி....

Aavin introduces new milk, curd, and ice cream

ஆவினில் புதிய தயாரிப்புகள் அறிமுகம் - X / Aavin

Updated On :

ஆவினில் 500 மி.லி. நிறைகொழுப்பு பால், 50 கிராம் கப் தயிர், ஐஸ்கிரீம் ஆகிய புதிய தயாரிப்புகள் அறிமுகமாகியுள்ளது.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி சின்னசாமி, திருச்சி புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிமாங்குடி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதலை நேரில் ஆய்வு செய்து, பால் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணையில் 500 மி.லி. நிறைகொழுப்பு பால், 50 கிராம் கப் தயிர் மற்றும் கேண்டி ஐஸ்கிரீம் ஆகிய புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார்.

தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஆவின் பாலகங்கள் அல்லாத மற்ற சில கடைகளில் ஆவின் பால் விலை உயர்த்தி விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆவின் பால் ஒப்பந்த வாகனங்கள் வேலை நிறுத்தம்

இதனிடையே அம்பத்தூரில் உள்ள ஆவின் ஆலையில் இருந்து பால் பொருள்களை கொண்டு செல்லும் ஒப்பந்த வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டீசல், வாகன பராமரிப்புக் கட்டணங்கள் உயர்ந்துள்ள நிலையில் 2023ல் போட்ட ஒப்பந்தப்படியே வாகனங்களை இயக்கச் சொல்வதாக ஆவின் வேன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

Summary

Aavin introduces new milk, curd, and ice cream

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.