முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஆவின் தட்டுப்பாடு! அதிகம் விற்கப்படும் தனியார் பால் விலை உயர்வு!

ஆவின் பால் தட்டுப்பாட்டுக்கு இடையே தமிழ்நாட்டில் அதிகம் விற்கப்படும் தனியார் பால் விலை உயர்ந்துள்ளது பற்றி..

ஆவின் பால்

ஆவின் பால்

Published On :

தமிழ்நாட்டில், கடந்த ஒரு சில மாதங்களாக ஆவின் பால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கடுத்து அதிகம் விற்பனையாகும் தனியார் பாலும் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆவின் பால் விற்பனையை குறைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் குற்றச்சாட்டியிருந்த நிலையில், தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தனியார் பால் விலை ஒரு லிட்டர் ரூ.82 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆவின் பால் கிடைக்காமல் தனியார் பால் வாங்கும் ஏழை, எளிய மக்கள் இனி அரை லிட்டர் பாலுக்கு ரூ.2 கூடுதலாக செலுத்தும் நிலை ஏற்படும்.

இதுபோல, தனியார் நிறுவனத்தின் தயிர் ஒரு லிட்டர் ரூ.88லிருந்து ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களை மேலும் துயருக்குள்ளாக்கும்.

முன்னதாக, மாலை நேரம் வரையிலாவது சில கடைகளில் ஆவின் பால் கிடைக்கும். இப்போது காலையிலேயே அனைத்து பாலும் விற்பனையாகிவிடுகிறது. இதனால் தனியார் பால் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்து மிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வைத்த குற்றச்சாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலை அண்மையில் உயா்த்தப்பட்டது. ஆனால், விற்பனை விலை உயா்த்தப்படவில்லை. கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அதே தவறை தற்போதைய அரசும் செய்துள்ளதால், ஆவின் நிறுவனத்துக்கு ஏற்படும் நிதி இழப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நிதி இழப்பைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஆவின் பால் விற்பனையை குறைக்க நிா்வாகம் வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இதனால் செயற்கையான பால் தட்டுப்பாடு ஏற்பட்டு, பால் முகவா்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

குமரி மாவட்டத்தில் ஆவின் நிறை கொழுப்பு பால் உற்பத்தி மற்றும் விற்பனை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பால் விநியோகம் திட்டமிட்டு பலமடங்கு குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தினமும் ஆவின் பால் விற்பனை 16.5 லட்சம் லிட்டருக்கும் அதிகமாக இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் 25 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது. தற்போது மேலும் 10% வரை விற்பனையை குறைக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆவின் கொள்முதல் விலை உயா்வைத் தொடா்ந்து தனியாா் பால் நிறுவனங்களும் விற்பனை விலையை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் விலை குறைவான ஆவின் பால் பக்கம் பொதுமக்கள் மீண்டும் திரும்பும் சூழல் உருவாகும். எனவே, ஆவின் நிறுவனத்தின் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு தடையின்றி பால் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER