ரூ.1,614 கோடி தென்கொரிய நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்த ஆந்திரம்!
ரூ.1,614 கோடி தென்கொரிய நிறுவனங்களின் முதலீட்டை ஆந்திரம் ஈர்த்துள்ளது பற்றி..

கார் உற்பத்தி - ENS
தமிழ்நாட்டின் அருகமை மாநிலமான ஆந்திரம், தென் கொரியாவைச் சேர்ந்த மூன்று வாகன உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து மொத்தம் ரூ.1,614 கோடி மதிப்பிலான, 1,418 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலான முதலீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டுடன் முதலில் அந்த நிறுவனங்கள் பேசிவந்த நிலையில், தென் கொரிய நிறுவனங்களை ஈர்த்து முதலீட்டு வாய்ப்பைப் பெற்றுள்ளது ஆந்திரம். இதனால் அந்த மாநிலத்தின் உற்பத்தித் துறை புத்தொலி பெற்றுள்ளது.
ஹூண்டாய், கியா போன்ற சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் ஹ்வாஷின், சியோயான் மற்றும் இவாமெட் ஆகிய மூன்று தென் கொரிய நிறுவனங்களும், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக மாநில அரசுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இது சுமார் 1,400 பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்வது மட்டுமல்ல, ஒரு நகரையே அதாவது அனந்தபூரின் நிலையை வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி மையமாக தரம் மாற்றுவதும் அடங்கும்.
மூன்று நிறுவனங்களும், முறையே ரூ. 850 கோடி, மற்றொரு நிறுவனம் ரூ. 514 கோடி, மூன்றாவது நிறுவனம் ரூ. 250 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய நிறுவனங்களுடன் ஆந்திர மாநில தொழில்துறை சார்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஆந்திர பொருளாதார மேம்பாட்டு வாரியமானது தென் கொரிய நிறுவனங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, ஆரம்பகட்ட கலந்துரையாடல்களில் பல்வேறு விஷயங்களுக்கு ஆதரவாகவும் சலுகைகளையும் அறிவித்து, முதலீட்டு முன்மொழிவுகளை, ஒப்பந்தங்களாக மாற்றியிருக்கின்றன.
ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாரா லோகேஷ், கடந்த ஜூலை மாதம் நேரடியாக தென் கொரியா சென்று, இந்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த ஒப்பந்தங்களை முடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளில், தென்னிந்தியாவில் தமிழ்நாடு - ஆந்திரம் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தென்கொரிய முதலீடுகள் ஆந்திரம் சென்றிருப்பது அந்த மாநிலத்துக்கு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
Summary
Andhra Pradesh attracts Rs 1,614 crore in investments from South Korean companies!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

