ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

களைகட்டும் தீபாவளி! மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் ரூ.4 கோடிக்கு விற்பனை!

களைகட்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் ரூ.4 கோடிக்கு விற்பனை

ஆட்டுச்சந்தை - கோப்பிலிருந்து

Updated On :

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனையானது. வேலி ஆடு ஒன்று ரூ.50 ஆயிரத்துக்கு விலை போனது குறப்பிடத்தக்கது.

தென் மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு அடுத்தபடியாக மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை புகழ்பெற்ற சந்தையாகும். இங்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் சந்தை நடக்கும் நிலையில், பண்டிகைக் காலக்கட்டங்களில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.

வருகிற 8-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி இன்னும் 4 நாள்களே இருப்பதால் இன்று அதிகாலை முதலே தீபாவளி பண்டிகைக்கான விற்பனை மேலப்பாளையம் சந்தையில் களைக்கட்டியது. வந்திருந்த வியாபாரிகள் கறிக்காக மொத்தமாக 8 முதல் 10 ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

ஆடுகளை சந்தைக்குள் கொண்டுச்செல்ல மாநகராட்சி தரப்பில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. ஆடுகளை வாங்குவதற்காக மக்களும், கறிக்கடைக்காரர்களும் குவிந்தனர்.

குறும்பாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என 3 வகை ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தாலும், கறிக்காக வெளியூருக்கு கொண்டு செல்லும் வியாபாரிகள் செம்மறியாடுகளை அதிகம் வாங்கிச் சென்றனர். கிராமப்புறங்களில் இருந்து வருவோர் வெள்ளாடுகளை வாங்குவதிலேயே விருப்பம் காட்டினர்.

ஆடுகளை வாங்கிச் செல்ல நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வியாபாரிகள் மட்டுமல்லாது, தேனி, மதுரை, கேரள வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர். சுற்றுவட்டாரங்களில் வாழும் கால்நடை வளர்ப்போர் மினி லாரியில் ஆடுகளை மொத்தமாக சந்தைக்குக் கொண்டு வந்தனர்.

ஆட்டின் உயரம், கறியின் அளவு, எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பாக, வேலி ஆடு என அழைக்கப்படும் ஒருவகை ஆடு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு செம்பு கிடா ரூ.28 ஆயிரத்திற்கும், சண்ட கிடா ரூ.22 ஆயிரத்திற்கும் ஏலத்தில் விலை போனது. பாவூர்சத்திரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு கிடா ரூ.40 ஆயிரத்திற்கு விலை போனது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன், விற்பனையும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், வழக்கத்தை விட கூடுதல் விற்பனை இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இன்று ஆட்டுச் சந்தை மட்டுமின்றி கருவாடு வகைகள், கோழி உள்ளிட்ட இறைச்சி விற்பனையும் அமோகமாக நடைபெற்றது. இதனால் இன்று ரூ.4 கோடியளவுகு விற்பனை தாண்டும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.