மகனைப் பார்த்துக் கொள்ள... பேருந்து ஓட்டுநருக்கு நிரந்தர பணியிட மாற்றம்!
மகனைப் பார்த்துக் கொள்ள வசதியாக பணியிட மாறுதல் கோரியிருந்த பேருந்து ஓட்டுநருக்கு நிரந்தர பணியிட மாற்றம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வரும் பேருந்து ஓட்டுநர் முரளிக்கு நிரந்தர பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உடல்நலம் குன்றிய தன்னுடைய மகனை பார்த்துக் கொள்ள ஏதுவாக கும்பகோணம் கோட்டத்துக்கு மாற்றக் கோரி, எஸ். முரளி என்ற அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒட்டுநர் முரளி கோரிக்கை விடுத்திருந்தார்.
பல முறை தான் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது நிலை குறித்து ஊடகங்களில் செய்தி பரவிய நிலையில், இன்று தமிழக அரசு அவரது கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறது.
ஓடடுநர் முரளியை கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு நிரந்தர பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், காரைக்குடி பணிமனையில் பணியாற்றும் எஸ். முரளி,. ஓட்டுநர் உடன் நடத்துனர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் பணிமனைக்கு ஒரு வழி நிரந்தர பணியிடமாறுதல் வேண்டி விண்ணப்பித்திருந்ததைத்தொடரந்து அவரது கோரிக்கைக் கடிதம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இயக்குநரால் பரிசீலிக்கப்பட்டு, இசைவு கடிதம் பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரளியின் மகனுக்கு தசைநார் சிதைவு நோய் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால், அவரால் சுயமாக எதையும் செய்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதால், தன்னுடைய மகனை கவனித்துக் கொள்ள வசதியாக பணியிட மாற்றும் கோரியிருந்தார்.
இந்த நிலையில், அவர் கேட்டபடி, கும்பகோணத்துக்கு பணியிட மாறுதல் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

