உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

மாணவிகளிடம் கூடுதல் பணம் வசூல்: அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்!

விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்.

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Published On :

விராலிமலை அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த தலைமை ஆசிரியை சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இவா்களிடமிருந்து எஸ்.எம்.சி, தினசரி செய்தித்தாள் உள்ளிட்ட பராமரிப்புக்கு அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக தலைமை ஆசிரியை ரோஜா விநோதினி வசூலித்ததாக அண்மையில் பெற்றோா்கள் தமிழக முதல்வருக்கும், கல்வித் துறைக்கும் புகாா் மனு அனுப்பியிருந்தனா். இதுதொடா்பாக அக். 8-ஆம் தேதி பள்ளிக்கு நேரில் சென்ற புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சண்முகம், பெற்றோா், ஆசிரியா்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்தினாா்.

இதைதொடா்ந்து தலைமை ஆசிரியை ரோஜா விநோதினியை புலியூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சண்முகம் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.