காவிரி விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடுராஜிநாமா எம்எல்ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்ட நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி!ஜெயிலர் - 2 ஓடிடியில் நவ. 12-இல் வெளியாகிறது!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

டபிள்யுடிஏ: சானியா மிர்ஸா சாதனையை சமன்செய்த 17 வயது தமிழக வீராங்கனை மாயா!

சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய தமிழக வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் குறித்து...

Maya Rajeswaran Revathi

மாயா ராஜேஸ்வரன் ரேவதி

Updated On :

சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டியில் 17 வயதான தமிழக வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி காலிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக டபிள்யுடிஏ டூரில் தனிநபர் மகளிர் பிரிவில் சானியா மிர்ஸா 2012ல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். தற்போது, இரண்டாவது இந்திய வீராங்கனையாக மாயா ராஜேஸ்வரன் ரேவதி முன்னேறியுள்ளார்.

உலக டென்னிஸ் தரவரிசையில் 669ஆவது இடத்தில் இருக்கும் தமிழக டென்னிஸ் வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி, 277ஆவது தரவரிசையில் இருக்கும் போலந்தின் வெரோனிகா ஃபால்கோவ்ஸ்கா உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் தமிழக வீராங்கனை மாயா 6-4, 6-3 என நேர் செட்களில் வென்றார். இரண்டாவது இந்திய வீராங்கனையாக காலிறுதிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

சானியா மிர்ஸாவின் சாதனையின் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மாயா இதனை நிகழ்த்தி காட்டியுள்ளார். மாயா தனது டபிள்யூ35 பட்டத்தை வென்றுள்ளார். உக்ரைன் வீராங்கனையுடன் இணைந்து இரட்டையர் பட்டத்தையும் வென்றுள்ளார்.

தமிழக மக்களுக்குப் பெருமைச் சேர்த்திருக்கும் மாயாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை ராபின் மாண்ட்கோமரி உடன் நாளை மோதவிருக்கிறார்.

Summary

Maya Rajeswaran Revathi becomes first Indian woman since Sania Mirza to reach WTA quarter-final

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.