பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

டென்னிஸில் சாதிக்கும் கோவை பெண்!

கோவை டென்னிஸ் மைதானங்களிலிருந்து ஃபிரான்ஸின் களிமண் ஆடுகளங்கள் வரையில் சவாலான சூழலிலும் தளராத நம்பிக்கை கொண்ட வீராங்கனையாகத் திகழ்கிறார், பதினாறு வயதான மாயா ராஜேஸ்வரன்.

Published On :

கோவை டென்னிஸ் மைதானங்களிலிருந்து ஃபிரான்ஸின் களிமண் ஆடுகளங்கள் வரையில் சவாலான சூழலிலும் தளராத நம்பிக்கை கொண்ட வீராங்கனையாகத் திகழ்கிறார், பதினாறு வயதான மாயா ராஜேஸ்வரன். தனது எட்டாம் வயதில் பொழுதுபோக்காக டென்னிஸ் ராக்கெட்டை கையில் எடுத்தார். ஜூனியர் போட்டிகளில் படிப்படியாக முன்னேறி, ஒவ்வொரு பட்டமாக வென்று பயணத்தைத் தொடங்கிய மாயா, இன்று சாதனையாளராக மிளிர்ந்துள்ளார். '2028 ஒலிம்பிக்ஸில் விளையாட வேண்டும்' என்பது மாயாவின் கனவு.

'எங்கிருந்து பயணத்தைத் தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல; நம்பிக்கையும் கடின உழைப்பும் ஒருவரை உயரங்களுக்குக் கொண்டு செல்லும்' என்பதை மாயாவின் உழைப்பு சொல்கிறது.

2026 ஏப்ரலில் நடைபெற்ற ஐ.டிஎஃப். ஜெ300 'போலியூ-சுர்-மெர்' போட்டி மாயாவுக்கு முக்கிய திருப்பமாக அமைந்தது. அதன் இறுதிப் போட்டியில், பாலா பினேரா செலாரியோவுக்கு எதிரான ஆட்டத்தில் மாயா கடும் சவாலை எதிர்கொண்டார். 4-6, 3-5 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில், போட்டி கைநழுவிச் செல்லும் சூழல் உருவானது. ஆனால், மாயா ஆட்டத்தின் போக்கை வியக்கத்தக்க வகையில் மாற்றி அமைத்து, 4-6, 7-5, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இது அவரது எட்டாவது ஐ.டி.எஃப். ஜூனியர் ஒற்றையர் பிரிவு பட்டமாகும். இந்த வெற்றியால் மாயா முதன்முறையாக ஐ.டி.எஃப். உலக ஜூனியர் தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் நுழையவுள்ளார்.

டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் வீராங்கனையாக இன்று மாயா ராஜேஸ்வரன் உருவெடுத்துள்ளார். ஜூனியர் பிரிவில், பிப்ரவரி மாதம் நடைபெற்ற டபிள்யூ.டி.ஏ. மும்பை ஓபன் தொடரின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 'வைல்ட்கார்டு' மூலம் தகுதிச் சுற்றில் நுழைந்த மாயா, தகுதிச் சுற்றில் இரண்டு போட்டிகளிலும், பிரதான சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் டபிள்யூ.டி.ஏ. $125 கே தொடர் ஒன்றில் அரையிறுதியை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இந்தியப் பெண்கள் டென்னிஸின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கும் மாயா 2024-ஆம் ஆண்டில் 'கிராண்ட் ஸ்லாம் பிளேயர் டெவலப்மென்ட் புரோகிராம்' மூலம் 50,000 டாலர் நிதியுதவியைப் பெற்றார்.

மல்லோர்கா தீவில் செயல்படும், ஓய்வு பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலின் அகாதெமியில் 2024-ஆம் ஆண்டில் ஒரு வாரம் பயிற்சி பெற்றார் மாயா. அங்கு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஒரு வருடப் பயிற்சி ஒப்பந்தத்தைப் பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

நடாலைப் போலவே மாயாவும் ஆக்ரோஷமான பேஸ்லைன் வீராங்கனையாகியிருக்கிறார். விம்பிள்டன் ஜூனியர் போட்டி, யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன் போட்டிகளில் பங்கு பெற்றுவரும் மாயா ராஜேஸ்வரன், செப்டம்பர் 2026 நிலவரப்படி, ஐ.டி.எஃப். ஜூனியர் தரவரிசையில் 17-வது இடத்திலும், டபிள்யூ.டி.ஏ. இரட்டையர் பிரிவு தரவரிசையில் 687-வது இடத்திலும், டபிள்யூ.டி.ஏ. ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 642-வது இடத்திலும் உள்ளார்.

'மாயா மிகச் சிறப்பாக விளையாடுகிறார். மாயா மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். மாயா என்னைப் போலச் சிறப்பாக வரலாம் என்று பலர் சொல்கிறார்கள். மாயா என்னை விடவும் சிறப்பாக வரக்கூடும்' என்கிறார் சானியா மிர்ஸா.

ஒற்றையர் பிரிவில் யாரும் இந்தியாவில் இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வெற்றி பெறவில்லை.

இந்திய டென்னிஸ் வரலாற்றில் அமிர்தராஜ் சகோதரர்கள், ரமேஷ் கிருஷ்ணன், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஸா, ரோஹன் போபண்ணா, சுமித் நாகல் ஆகியோரே முத்திரை பதித்துள்ள நிலையில், அந்தப் பட்டியலில் மாயாவும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.