
தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்!
ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றது பற்றி...
தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார் - PIB
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து ஜி.வி. பிரகாஷ் குமார் பெற்றார்.
72-வது தேசியத் திரைப்பட விருதுகள் விழா முதல்முறையாக தில்லியிலிருந்து மாற்றப்பட்ட குஜராத் மாநிலம் ஏகதா நகரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி வருகிறார்.
இதில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை அமரன் படத்துக்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பெற்றுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு மூன்றாவது தேசிய விருதாகும்.
முன்னதாக, சூரரைப் போற்று மற்றும் வாத்தி திரைப்படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுள்ளார்.
இதேபோல், அமரன் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதை ராஜ்குமார் பெரியசாமி, சிறந்த படத்தொகுப்பாளர் விருதை ஆர். கலைவாணன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
Summary
G.V. Prakash Kumar won a National Award!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







