பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசுக்கு ஒரு ஆண்டு அவகாசம் அளிக்கவேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.

பிரகாஷ் ராஜ்

Published On :

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசுக்கு ஒரு ஆண்டு அவகாசம் அளிக்கவேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த நடிகர் பிரகாஷ்ராஜ், தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அவர் பேசுகையில், “புதிய அரசு பொறுப்பேற்று 120 நாள்கள்தான் ஆகிறது. மக்கள் ஒரு மாற்றத்திற்காகவே இந்த அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை, அதாவது குறைந்தபட்சம் ஒரு வருடமாவது அரசுக்கு அவகாசம் வழங்க வேண்டும். அதற்குள் அவசரப்படுவது சரியல்ல.

ஜனநாயகத்தில் மக்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவர்களுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவர்தான் முதலமைச்சர்.

கடந்த ஆட்சியிலும் போராட்டங்கள் நடைபெற்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றாரா அல்லது தோற்கடிக்கப்பட்டாரா, அல்லது எஸ்.ஐ.ஆர் காரணமா என்பது தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் மற்றும் பி.டி.ஆர் போன்ற முன்னணி தலைவர்கள் தோல்வியடைந்தது மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக செயற்கையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் ஜெயிப்பதில்லை, மாறாக ஆளுங்கட்சிகள்தான் தோற்றுப்போகின்றன. மக்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மத்திய அரசு தற்போது சைலண்ட் மோடில் உள்ளது. அவர்களின் வீழ்ச்சிக்கான காலம் நெருங்கிவிட்டது, அவர்களின் பாவம் விரைவில் பழுத்துவிடும். எஸ்.ஐ.ஆர் மூலம் பலரின் வாக்குகள் பறிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் உள்ளிட்ட பலருக்கு வாக்குரிமை இல்லை எனக் கூறுவதும் தவறானது.

தொகுதி மறுவரையறை மசோதா தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும். இது தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைக்கும் என்பதால், எந்தக் கட்சி அதனை ஆதரித்தாலும் நாம் எதிர்த்துப் போராடித்தான் ஆக வேண்டும்.

மேகதாது விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் சுமூகமாகப் பேசி தீர்வு காண வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை உணர வேண்டும்” என்று தெரிவித்தார்.

அடுத்த 20 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது என தவெக கூறுவது பற்றிய கேள்விக்கு, ”அதைச் சொல்வது அவர்களின் கடமை. யார் சொல்கிறார்கள், யார் செய்கிறார்கள் என்று பார்ப்பதை விட, ஒரு குடிமகனாக நமக்குரிய வேலைகள் நடக்கிறதா என்று பார்த்து கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

மோடியை எனக்குப் பிடிக்காது, நான் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும், அவர்தான் என் பிரதமர்; அவரை நான் கேள்வி கேட்பேன். அதேபோல், விஜய் அரசுக்கும் ஒரு ஆண்டு அவகாசம் கொடுத்துப் பார்ப்போம். வேலை நடக்கவில்லை என்றால் கேள்வி கேட்போம் என்றார்.

மக்கள் தான் அரசியல் செய்ய வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நமக்கான பணிகளைச் செய்ய வேண்டும். தற்போதைய ஜென்-ஸீ இளைஞர்கள் கேள்விகளைக் கேட்கத் தொடங்கியுள்ளனர். ஜனநாயகத்தை மதிப்போம், மக்களின் தீர்ப்பை மதிப்போம், மக்கள் நலப் பணிகள் நடைபெறவில்லை என்றால் தொடர்ந்து கேள்வி கேட்போம்” என்றார்.

Summary

Actor Prakash Raj has stated that the Tamil Nadu government led by Chief Minister Vijay should be given a one-year grace period.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER