ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்: பிரகாஷ் ராஜ்

அரசியல் விழிப்புணர்வை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தது பற்றி...

Actor Prakash Raj.

நடிகர் பிரகாஷ் ராஜ். - கோப்புப் படம்

Published On :

அரசியல் விழிப்புணர்வை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் வியாழக்கிழமை (ஆக. 20) தெரிவித்தார்.

கேரள மாநிலம், திருச்சூரில் ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் (DYFI) மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்த பிறகு, பிரகாஷ் ராஜ் பேசியதாவது:

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களின் மூலம், பாசிச ஆட்சி முடிவுக்கு வருகிறது. இது மாதிரியான சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த நாட்டின் இளைஞர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம், ‘இப்போது எங்களுக்கு உங்களைப் பற்றியும், உங்கள் வினாத்தாள் கசிவு பற்றியும் தெரியும்’ என்று கூறியுள்ளனர். முதல் முறையாக, இளைஞர்கள் அவரது அகங்காரத்தைச் சிதைத்துள்ளனர்.

முதல்முறையாக நாட்டு குடிமக்களும், இளைஞர்களும், ‘நாங்கள் உங்களைக் கண்டு அச்சப்படவில்லை’ என்று கூறியிருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும், வேலைகளையும் நிலங்களையும் இழக்க நேரிட்டதால் அவர்களால் மேற்கொண்டு போராட முடியவில்லை. ஆனால், இந்த இளைஞர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை.

தற்போது போராட்டக் களங்கள் மாறிவிட்டன. அது ஜந்தர் மந்தரில் மட்டுமல்லாது, நாம் எங்கு சென்றாலும் அங்கு போராட்டம் நடைபெறுகிறது.

எனவே, உங்களைப் போன்ற இளைஞர்கள் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

Summary

Actor Prakash Raj stated on Thursday (Aug. 20) that young people should cultivate political awareness.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.