5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

மோடி வளர்ச்சியைத் தருகிறார் என்றால் ஏன் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள்? மாதவனிடம் ராஜ் தாக்கரே கேள்வி!

பிரதமர் மோடி இந்தியாவை வளர்ச்சிபெறச் செய்துள்ளார் என்றால் ஏன் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள் என நடிகர்கள் மாதவன், விவேக் ஓபராயிடம் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

மாதவன்

Updated On :8 வினாடிகள் முன்பு

பிரதமர் மோடி இந்தியாவை வளர்ச்சிபெறச் செய்துள்ளார் என்றால் ஏன் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள் என நடிகர்கள் மாதவன், விவேக் ஓபராயிடம் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையின் தலைவர் ராஜ் தாக்கரே, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டு வெளிநாட்டில் வாழும் நடிகர்கள் பற்றி கடுமையாகச் சாடினார்.

செய்தியாளர்களுடன் நேற்றுப் பேசிய ராஜ் தாக்கரே, ”பிரதமர் மோடி திரைப்படத்தைத் தயாரித்து அதில் மோடியாகவே நடித்த விவேக் ஓபராய் துபாயில் வசித்து வருகிறார். அவர் இந்தியாவிலேயே தங்குவதில்லை.

அதேபோல, பிரதமர் மோடி நாட்டிற்கு நல்ல பணிகளைச் செய்துள்ளதாகவும், தொழில்துறையில் இந்தியாவை வளர்ச்சி பெறச் செய்துள்ளதாகவும் நடிகர் மாதவன் கூறினார். ஆனால், அவரும் துபாயில் தான் வசிக்கிறார்.

ராஜ் தாக்கரே

ராஜ் தாக்கரே

பிரதமரின் மீதும் இந்தியாவின் மீதும் நீங்கள் அன்பு கொண்டிருந்தால், நமது பிரதமர் வளர்ச்சிப் பணிகளைச் செய்வதாக நீங்கள் நம்பினால், ஏன் குடும்பத்துடன் துபாயில் வசிக்கிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசுக்கு ஆதரவான திரைப்படங்களில் பணியாற்றும் இந்த நடிகர்கள், பின்னர் துபாய்க்குச் சென்று வாழ்க்கை நடத்துவதாக அவர் தெரிவித்தார்.

Summary

If Modi delivers growth, why do you live abroad? Raj Thackeray asks Madhavan!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.