ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் இணைந்த ராஜ் பி. ஷெட்டி!

பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி சேயோன் படத்தில் இணைந்தது குறித்து...

Raj B. Shetty

ராஜ் பி. ஷெட்டி - படம்: எக்ஸ் / ஆர்கேஎஃப்ஐ

Published On :5 ஜூலை 2026, 2:14 pm IST

பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் இணைந்தது தமிழ் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்துள்ளார்.

கமல்ஹாசன் தயாரிக்கும் சேயோன் படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்கி வருகிறார். தாய்கிழவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு இரண்டாவது படமே பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மதுரை வாழ்வியல் சார்ந்த படமாக உருவாகிறது.

முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன.

சேயோன் படத்தை அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜ் பி. ஷெட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, சேயோன் படத்தில் இணைந்ததுக்கு படக்குழு நன்றி கூறியுள்ளது.

இயக்குநராக ராஜ் பி. ஷெட்டி கருட கமனா விருஷப வாகன படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்றார். அவர் கடைசியாக இயக்கிய சுவாதி முத்தின மழ ஹனியே என்ற படமும் மிகவும் வரவேற்பைப் பெற்றது.

Summary

Kannada actor Raj B Shetty joins sivakarthikeyan Seyon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.