அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி

அயோத்தி நன்கொடை முறைகேடு வழக்கில் பிரதமர் மோடியிடம் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

கேஜரிவால் கேள்வி - கோப்புப் படம்

Updated On :2 ஜூலை 2026, 4:15 pm IST

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் விளக்கம் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால்,

அயோத்தி ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியது, கட்டுமானப் பணிகள், நன்கொடைகள் ஆகியவற்றில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து பிரதமருக்குத் தெரியாமல் இருந்திருக்கக்கூடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ராமர் கோயில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பிரதமரால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். உள்துறை அமைச்சக அதிகாரியும் இந்த அறக்கட்டளையில் இடம்பெற்றுள்ளார். இந்த முறைகேட்டைத் தடுப்பதற்கு பிரதமர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மௌனம் காப்பது ஏன்? இதுகுறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்.

பிரதமர் யாரை காப்பாற்றுகிறார்?

முறைகேடு தொடர்பாக இந்த வழக்கில் வெறும் எட்டு பேரை மட்டும் கைது செய்தது ஏமாற்று வேலை. உண்மையான குற்றவாளிகள் வேறு சிலர். பிரதமர் யாரைக் காப்பாற்றுகிறார்? எதற்காகக் காப்பாற்றுகிறார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நன்கொடைகளைத் திருடியதாகவும், கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்க, உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஏன் புல்டோசர்களைப் பயன்படுத்தவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Aam Aadmi Party convener Arvind Kejriwal has demanded that Prime Minister Modi provide an explanation regarding the alleged irregularities in donations for the Ayodhya Ram Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.