பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது ஜார்க்கண்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்டின் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள நாகரி காவல் நிலையத்தில் பாஜகவின் மண்டலத் தலைவர் ரிதேஷ் ராஜ் மஹ்தோ நேற்று புகார் ஒன்றை அளித்தார்.
அதில், சாஹர் கிராமத்தைச் சேர்ந்த அலீம் அன்சாரி என்பவர், சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய விடியோ ஒன்றை வெளியிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்றோருக்கு எதிரான அவதூறு கருத்துகளைப் பயன்படுத்தி அவர்களைக் கொலை செய்வதாக மிரட்டி விடியோ பதிவிட்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி அபிஷேக் ராய், "குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகிறோம். அவர், சர்ச்சைக்குரிய விடியோவை வெளியிட்டு சமூக நல்லிணக்கத்தைக் குலைக்க முயன்றதாகவும், புனிதமான அரசியலமைப்புப் பதவிகளை வெளிப்படையாக அவமதித்ததாகவும் புகார்தாரர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை முடிந்ததும் அவர் கைது செய்யப்படுவார்” என்று தெரிவித்தார்.
Summary
Case registered against person who issued death threats to Prime Minister Modi, Amit Shah, and Yogi Adityanath!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமித் ஷா பதவி விலக வேண்டும்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
தோல்வியடைந்த அமித் ஷா பதவி விலக வேண்டும்: சிஜேபி நிறுவனர் அபிஜீத்

மாணவர்கள் மீது தடியடி! அமித்ஷாவுக்கு தொலைபேசியில் வந்த லைவ் அப்டேட்! - ராகுல் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


