முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!அமெரிக்க இடைக்கால தேர்தல்! இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி!விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டம்: சென்னையில் அமைச்சர் தொடக்கி வைத்தார்!

வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை திட்டத்தை சென்னையில் அமைச்சர் காந்தி ராஜ் தொடக்கிவைத்தது பற்றி..

Vettri Special Vegetables Kit with 10 varieties launched today

வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டம் தொடக்கம் - X

Updated On :

ரூ. 100 -க்கு 10 காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ விற்பனை திட்டத்தை சென்னையில் அமைச்சர் காந்தி ராஜ் இன்று (நவ. 5) தொடக்கிவைத்தார்.

தீபாவளி திருநாளைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ ஒன்று ரூ.100 என்ற சலுகை விலையில், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டக சாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மற்றும் 4 நடமாடும் காய்கறி கடைகள் (சென்னையில் மட்டும்) விற்பனை செய்யப்படவுள்ளது.

பெரிய வெங்காயம் (500 கிராம்), தக்காளி (500 கிராம்), கத்தரிக்காய் (250 கிராம்), உருளைக்கிழங்கு (250 கிராம்), கேரட் (200 கிராம்), பீன்ஸ் (200 கிராம்), பச்சை மிளகாய் (100 கிராம்), எலுமிச்சை (100 கிராம்), இஞ்சி (50 கிராம்), தேங்காய் (400-450 கிராம்) ஆகியவை இந்தத் தொகுப்பில் அடங்கும்.

Story image

இந்த வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு, இன்று (நவ. 5) முதல் நவ. 7-ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில் சென்னையில் ‘வெற்றி காய்கறி தொகுப்பு திட்ட'த்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தொடக்கிவைத்தார்.

Summary

Vettri Special Vegetables Kit with 10 varieties launched today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.