முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!அமெரிக்க இடைக்கால தேர்தல்! இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி!விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து ஏன்? தமிழ்நாடு அரசு விளக்கம்

400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டதன் காரணம் குறித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கம் பற்றி...

வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து ஏன்? - பிரதிப் படம்

Updated On :

மகாராஷ்டிரத்தில் இருந்து வெங்காயக் கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டதன் காரணம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்படவிருந்த நிலையில், வெங்காயத்தின் தரத்தில் குறை இருந்ததாகக் கூறி கொள்முதல் ஆணையை தமிழக அரசு ரத்து செய்தது. இதனிடையே, வெங்காயக் கொள்முதல் ஆணை ரத்து விவகாரம் குறித்து தவெக அரசை எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.

இந்த நிலையில், ஆணை ரத்து குறித்து தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்றேவு அங்காடிகளில் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் வழங்குவதற்காக NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு) நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCC) ஆணை வழங்கியிருந்தது.

மகாராஷ்டித்தில் உள்ள நாசிக்கிற்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றபோது, தமிழ்நாட்டுக்கு வெங்காயம் ஒரு நாள் முன்பே அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. உடனே அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை ஆய்வு செய்தபோது. 'ஏ' தர வெங்காயத்துடன் அழுகிய மற்றும் நிராகரிப்புத் தர வெங்காயம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெங்காய மூட்டைகளை, அக். 31-ல் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தது. அப்போது மூட்டைகளில் 50.2 சதவிகித வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட 45 மி.மீ அளவைவிட குறைவாகவும், 20 முதல் 26 சதவிகிதம் வரை அழுகியதோடு, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் கழிவாக இருந்தது தெரியவந்தது.

பொருளின் தரம் சரியாக இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். வெங்காயத்தின் தரம் குறைவாக இருந்ததால் பொதுமக்களின் நலன்கருதி கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டது. முன்பணம் எதுவும் வழங்கப்படாத நிலையில், கொள்முதல் ஆணை அக். 31-ல் ரத்து செய்யப்பட்டதால், அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. தவறான தகவலைப் பரப்பாதீர்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

Summary

Why was the onion procurement order cancelled? Tamil Nadu government provides an explanation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.