அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 பயிர்க்கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புசண்டியர் படத்தை கமல் வெளியிடக் கூடாது: கிருஷ்ணசாமி எதிர்ப்பு குதிரை பேரம் வழக்கு: அதிமுக நிர்வாகி மன்னனிடம் 2-வது நாளாக விசாரணை! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு! நுழைவுச்சீட்டு இருந்தும் ரசிகர்கள் திரும்பச் சென்றது வேதனை அளிக்கிறது: நடிகர் தனுஷ் வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்த ஸ்ருதி புதிய வாழ்க்கைப் பயணம்: குருவாயூர் கோயிலில் திருமணம்! கலைஞானி கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! மு.க. ஸ்டாலின் தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (நவ. 7) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி!

விழுப்புரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 10 வயது சிறுவன் பலி

விழுப்புரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 10 வயது சிறுவன் பலியானது பற்றி...

A 10-year-old boy was killed in a cooking gas cylinder explosion in Viluppuram

சமையல் எரிவாயு உருளை வெடித்து சேதமடைந்த வீடு.

Updated On :

விழுப்புரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 10 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரசோழபுரம் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் பத்ரிநாத் (10) . சனிக்கிழமை காலை சரண்யா சமையல் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சமையல் எரிவாயு உருளை வெடித்தது.

இதன் காரணமாக வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்ததில் வீட்டுக்குள் இருந்த பத்ரிநாத் பலியானான்.

மேலும் சிறுவனின் தாய் மற்றும் தந்தை பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த அரகண்டநல்லூர் போலீஸார் நிகழ்விடம் சென்று காயம் அடைந்த இருவரையும் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Summary

The tragic death of a 10-year-old boy in a cooking gas cylinder explosion in Viluppuram has caused widespread sorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.