தீபங்கள் ஒளிர்வதுபோல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும்: எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து!
தீபாவளி பண்டிகையொட்டி தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி..

எடப்பாடி பழனிசாமி - அதிமுக
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழக மக்களுக்கு அதிமுக பொதுச்செயல் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி: தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.
தீபாவளி திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு பட்டாசுகளை வெடித்து, தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட, செல்வம் செழித்திட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தீபங்கள் ஒளிர்வதுபோல் மக்களின் வாழ்வும் ஒளிரட்டும். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் இனிய தீபவாளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என்று தெவித்துள்ளார்.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami has extended Diwali greetings to the people of Tamil Nadu, as Diwali is set to be celebrated tomorrow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


