டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி!விஏஓ-க்களுக்கு மாதம் ரூ.1,000 பராமரிப்புப் படி: தமிழக அரசுகாத்திருப்போா் பட்டியலில் உள்ள ஆசிரியா்களுக்கு பணி வாய்ப்புஇஸ்ரேலில் எதிா்க்கட்சி கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பு: அதிபா் நாளை முடிவுபுதிய காசோலை விதிகள்: 2027 ஜனவரி 1 முதல் அமல்1.5 டிரில்லியன் டாலா் இலக்கை எட்ட முதலீட்டு ஊக்குவிக்க ஆணையம்: தமிழக அரசு அமைத்தது

கலைஞானி கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! மு.க. ஸ்டாலின்

கமல்ஹாசனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி..

M.K. Stalin Greets Kamal Haasan on His Birthday

மு.க. ஸ்டாலின் - மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் - (கோப்புப்படம்)

Updated On :

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலினின் சமூக வலைத்தளப் பதிவு: “திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், எம்பியுமான நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 72ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, முதல்வர் விஜய் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.