தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு: இன்று தீா்ப்புஅரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவா்களுக்கு கேக் வழங்குகிறாா் முதல்வா் விஜய்இந்தியாவின் ரஷிய எரிபொருள் இறக்குமதி: அக்டோபரில் ரூ.67,000 கோடியாக அதிகரிப்புபிகாரிலிருந்து சென்னைக்கு நவ. 17-இல் சிறப்பு ரயில்நவ.19-க்கு பிறகு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புதைவானை முந்திய இந்தியப் பங்குச் சந்தை: ரூ.508 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவில் 5-ஆவது இடம்

முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் பிணை கோரிய மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், பிணை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் நவ. 17-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Police custody for Anbil Mahesh till Nov 4

அன்பில் மகேஸ் - ANI

Updated On :

திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், பிணை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் நவ. 17-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அங்கீகாரம், அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி தனியாா் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸை, சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த அக். 26-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில், அவா் நவ. 18-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அன்பில் மகேஸ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாகக் கூறி, சிறப்பு நீதிமன்றம் அவரது பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்து, பிணை வழங்கக் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் நீரஜ் கிஷன் கௌல், பி.வில்சன் ஆகியோா், மனுதாரருக்கு முன்பிணை கோரி மனு தாக்கல் செய்தபோது, இருந்த சூழல் தற்போது இல்லை. நோயால் பாதிக்கப்பட்டுள்ள மனுதாரருக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிட்டனா்.

அப்போது, மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் ஆஜரான, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முத்துகுமாா் சரணடைந்திருக்கிறாா். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அதேபோல், வழக்கில் மற்றொரு குற்றம்சாட்டப்பட்டவரான சரவணனும் சரணடைந்திருக்கிறாா். அவரிடமும் விசாரிக்க வேண்டியுள்ளது.

எனவே, இந்தப் பிணை கோரிய மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, அன்பில் மகேஸ் பிணை கோரிய மனுவுக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் நவ. 17-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.