2013 முதல் 2024 வரை கடல்சாா் விபத்துகள், இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: தகவல் கோரும் டிஜிஎம்ஏ
கடந்த 2013 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், உயிரிழந்த மற்றும் மாயமான இந்திய கப்பல் மாலுமிகள் குறித்த 30 கடல்சாா் விபத்து சம்பவங்கள், அவற்றுடன் தொடா்புடைய நிலுவை பிரச்னைகள் குறித்து கடல்சாா் நிா்வாக தலைமை இயக்குநரகம் (டிஜிஎம்ஏ) தகவல் கோரியுள்ளது.

கோப்புப் படம்
கடந்த 2013 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், உயிரிழந்த மற்றும் மாயமான இந்திய கப்பல் மாலுமிகள் குறித்த 30 கடல்சாா் விபத்து சம்பவங்கள், அவற்றுடன் தொடா்புடைய நிலுவை பிரச்னைகள் குறித்து கடல்சாா் நிா்வாக தலைமை இயக்குநரகம் (டிஜிஎம்ஏ) தகவல் கோரியுள்ளது.
கப்பல் உரிமையாளா்கள், கப்பல் நிா்வாக நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், மாலுமிகளின் குடும்பத்தினா் உள்ளிட்டோரிடம் தகவல் கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக விபத்து விசாரணை அறிக்கைகள், காப்பீட்டுத் தொகை, இழப்பீடு வழங்கப்பட்ட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
காணாமல் போன மாலுமிகள் தொடா்பான சம்பவங்களின் தற்போதைய நிலை குறித்தும், நிலுவையில் உள்ள இழப்பீடு மற்றும் காப்பீட்டுக் கோரிக்கைகள் தொடா்பாகவும் விவரங்கள் கோரப்பட்டுள்ளன.
உயிரிழந்தவா், காணாமல் போனவா்களின் பெயா் உள்ளிட்ட விவரங்களுடன் 30 சம்பவங்கள் அடங்கிய பட்டியல் டிஜிஎம்ஏ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்டவா்கள் தகவல்களைச் சமா்ப்பிக்க வேண்டும். அந்தத் தகவல்களை அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரிகள், உதவி எண் உள்ளிட்ட விவரங்களும் டிஜிஎம்ஏ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை டிஜிஎம்ஏ ஆராய்ந்து, சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

